கிழக்கு அமெரிக்காவில் உள்ள பல மாகாணங்களில் கடுமையான பனிப்புயலால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாது பனி கொட்டி வருகிறது. இதனால் வீடுகள், மரங்கள், வாகனங்கள் பனிப்போர்வை போர்த்தி காட்சியளிக்கின்றன. மேலும் சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் பனித்துகள்கள் குவிந்து கிடக்கின்றன. இதனால், 1 லட்சத்து 17 அயிரத்துக்கும் மேற்ப்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். மேலும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது……….