3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் ரஷ்யா இடையேயான 3 ஆம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்ய நாட்டு பிரதிநிதிகள், பெலராஸில் இருமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முதலாவதாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், 2வது பேச்சுவார்த்தையில் மனிதாபிமான அடிபப்டையில் சில நடவடிக்கைகள் முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த சனிக்கிழமை உக்ரைனின் இரண்டு முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வண்ணம் சில மணி நேரங்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் 3 ஆம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

Translate »
error: Content is protected !!