உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி…

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பாமக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதே கூட்டணியில் தான் தொடர்கிறது என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்ததாக புதுச்சேரி மாநில அமைப்பாளர் தன்ராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில அமைப்பாளர் தன்ராஜ்., நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, என்ஆர் காங்கிரஸ் மற்றும் அதிமுக தலைவர்கள் மட்டும் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர் ரங்கசாமி பாமகவிற்கு மட்டும் அழைப்பு விடுக்கவில்லை என்றார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதியில் தனித்து போட்டியிட இருந்த போது கூட்டணி தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க போட்டியிடாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு கொடுத்தோம் என்ற அவர் புதுச்சேரியில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.

 

 

 

 

 

Translate »
error: Content is protected !!