திருப்பூர் சாய ஆலை விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு – அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் வித்யாலாயம் பகுதியில் உள்ள தனியார் சாயப்பட்டறையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷவாயு தாக்கியதில் நேற்றைய தினம் திணேஷ் , வடிவேல் என இருவர் உயிரிழந்தனர்.  

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் என்பவர் சிகிச்சை பலனளின்றி இன்று உயிரிழந்தார். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தொழிலாளர்கள் பணியாற்றிய சாய ஆலையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணை இயக்குனர் புகழேந்தி தலைமையில் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். விபத்து குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என அறிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!