புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து மத்திய பிரதேச மாநிலம் போபாலில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் மாணவரணியினரைக் போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
போலீசார் வைத்திருந்த இரும்பு தடுப்புகளை நெருக்கித் முன்னேறி ஏராளமான காங்கிரஸ் மாணவரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்வாங்கிவந்த காவல்துறையினர் ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.