குடியரசு தலைவர் சிறந்த சேவைக்கான காவல் பதக்கங்கள்

குடியரசு தலைவர் சிறந்த சேவைக்கான காவல் பதக்கங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும், காவல்துறை மற்றும் மத்திய 
பாதுகாப்பு படை பதக்கங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பது உண்டு. 
அந்தவகையில் நடப்பாண்டு 662 பேருக்கு காவல் துறை பதக்கம் மற்றும் 88 பேருக்கு 
குடியரசுத் தலைவரின் சிறப்புச் சேவைக்கான பதக்கம் என மொத்தம் 939 பதக்கங்கள் 
அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர துணிச்சலுக்கான காவல் பதக்கங்கள் 189 பேருக்கு 
அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடியரசு தலைவர் சிறந்த சேவைக்கான விருதினை 
சென்னை காவல்துறை ஏடிஜிபி ஜி வெங்கட்ராமன், தஞ்சாவூர் சிஐடி சிறப்பு பிரிவு காவல் 
ஆய்வாளர் சி. சிவனருள் ஆகியோர் பெறுகின்றனர். மேலும் சிறந்த சேவைக்கான 
காவல்துறை பதக்கம் 18 பேருக்கு வழங்கப்படவுள்ளது.
Translate »
error: Content is protected !!