எப்போதும் காவல்துறையினர் தான் ஹீரோக்கள்- சொல்கிறார் தங்கமகன்!

எப்போதும் காவல்துறையினர் தான் ஹீரோக்கள் என பாராஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டிற்கான பாராலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர் இரண்டாவது முறையாக பதக்கம் வென்றுள்ளார், கடந்தமுறை, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோடி ஜெனிவா பாரிலிம்பிக் உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கம் வென்றிருந்தார்.இவரை தமிழக அரசு, அரசியல் வட்டாரங்கள்  மாரியப்பனை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசார் மாரியப்பனை கௌரவிக்கும் விதமாக சென்னை பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாரியப்பனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய மாரியப்பன், அனைவரும் விளையாட்டு வீரர்களை ஹீரோவாக எண்ணுகின்றனர் ஆனால் உண்மையான ஹீரோ காவல்துறையினர் தான் குடும்பங்களை மறந்து மக்களை காத்து வருகின்றனர் என்றார்.

Translate »
error: Content is protected !!