60க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம், போக்குவரத்து துண்டிப்பு

 

வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு 60-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணை முழு கொள்ளவை எட்டியதை தொடர்ந்து வைகை அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரத்தை அடுத்துள்ள கார்குடி, காவனூர், மென்னந்தி, புல்லங்குடி உள்ளிட்ட 20-கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கிருந்த 600 ஏக்கரில் மிளகாய், நெல் போன்ற  நடவு செய்திருந்த வயல்வெளிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஆர். காவனூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ராமநாதபுரத்திலிருந்து காவனூர், பாண்டியூர், நயினார்கோவில் வழித்தடத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!