தொடரும் பதற்றத்திற்கு இடையே, ரஷ்யாவின் அணு ஆயுத படைப்பிரிவின் போர் ஒத்திகையை அதிபர் புதின் இன்று பார்வையிட உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இது முன்னரே திட்டமிடப்பட்ட பயிற்சிதான் என்றும் தற்போதைய சூழலுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றார். இந்த பயிற்சியை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து புதின் பார்வையிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டார். ராணுவக் கட்டளை, அதற்கேற்ப படைகளின் தயார் நிலை, அணு மற்றும் அணு அல்லாத ஆயுதங்கள் சோதனை நடைபெறும் என்றார். வான்வெளிப் படைகள், தென் பகுதி ராணுவம், ஏவுகணைப் படைகள், வடக்கு கடற்படை மற்றும் கருங்கடல் கடற்படை ஆகியவை இந்த பயிற்சியில் ஈடுபடும் என்றும் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.