கொரோனா தடுப்பு விதிமுறைகளை நீக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன்

கொரோனா தடுப்பு விதிமுறைகளை நீக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சனின் முடிவு இங்கிலாந்து மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் விதிமுறைகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக போரிஸ் ஜான்சன் கூறியிருந்தார். ஆனால், தினசரி உயிரிழப்பு 300 ஆக உள்ள நிலையில் இதனை ஏற்க முடியாது என்றும் மக்கள் உயிருடன் அரசு விளையாடுகிறது என்றும் பெரும்பாலானவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவே பிரதமர் இதனை பயன்படுத்துவதாகவும் குறிப்பிடுகின்றனர். அதே சமயத்தில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது முக்கியம் என்றும் ஒரு சாரார் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!