ரூ.18,000 கோடி மதிப்பிலான திட்டங்கள்

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி டிசம்பா் 4-ம் நாள் தொடங்கி வைக்க உள்ளார்.

மிகவும் தொலைவில் உள்ளவை என்று கருதப்பட்ட பகுதிகளுக்கு போக்குவரத்துத் தொடா்பை அதிகப்படுத்தவும் எளிதாக சென்றடைவதை விரிவுபடுத்தவுமான அடிப்படையில் இந்தத் திட்டங்கள் அமைகின்றன என கூறப்படுகிறது. இதில் டெல்லி-டேராடூன் பொருளாதார வழித்தடம் பயண நேரத்தை இரண்டரை மணி நேரமாகக் குறைக்கும் எனவும், வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாத வகையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய உயா்மட்ட பாதையாக இது இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

சார்தாம் உள்ளிட்ட பகுதிகளுக்குத் தடையில்லாப் போக்குவரத்தை அளிப்பதாக சாலைத் திட்டங்கள் தொடங்கப்படுவது சுற்றுலாத் துறையை ஊக்கப்படுத்தும் எனவும், அடிக்கடி மண்சரிவு ஏற்படும் பகுதியான லம்பாகட் மண்சரிவை கட்டுப்படுத்தும் திட்டம் பயணத்தை சுமுகமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!