பைடனுடன் புதின் கலந்துரையாடல்..

உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்க தயாரான நிலையில் அதிபர் புதினுடன் நீண்ட விவாதம் நடத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வரும் 7ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி காட்சியில் கலந்துரையாட உள்ளார் என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கு இடையேவுள்ள பிரச்சனைகள் குறித்து பேசப்படும் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது படை எடுக்க சுமார் 2 லட்சம் ராணுவ வீரர்களை எல்லைப்பகுதியில் ரஷ்யா நிறுத்திவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இரு நாட்டு தலைவர்களின் கலந்துரையாடல் முக்கியமானதாக கருதப்படுகிறது.

Translate »
error: Content is protected !!