தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார். இணையதளத்தில் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியானதைத் தொடர்ந்து கே.டி.ராகவன் ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து கே.டி.ராகவன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு,
தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். எனனை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான்30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன் என அவர் பதிவிட்டுள்ளார்.