டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்

வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய இயக்குனரகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்  காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றார்.

மேலும் வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நீலகிரி, கோவை யில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அடுத்த 24 மணி நேரத்திற்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். 13ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற தற்போதை நிலவரப்படி வாய்ப்பில்லை என்றார்.

Translate »
error: Content is protected !!