போர் நிறுத்தம் குறித்து ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என உக்ரைன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷ்ய படைகள் கீவ் நகரையும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் உக்ரைன் ஆட்சி அதிகாரத்தை அந்நாட்டு ராணுவ படை கையில் எடுக்க வேண்டும் எனவும், உக்ரைன் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்ட முடியும் என்றும் ரஷ்யா அதிபர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், போர் நிறுத்தம் மற்றும் அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது. அமைதிப் பேச்சு வார்த்தையை எங்கு, எப்போது நடத்துவது என்பது குறித்து உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆலோசித்து வருவதாக உக்ரைன் அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.