ஸ்விட்சர்லாந்தில் பரிசோதனைக்காக விலங்குகளை பயன்படுத்துவதை முழுமையாகத் தடை செய்வது தொடர்பான வாக்கெடுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் ஸ்விட்சர்லாந்தில் ஆய்வகப் பரிசோதனையில் எலி, பூனை, நாய், குதிரை, மாடு என 5 லட்சத்து 50 ஆயிரம் விலங்குகள் உயிரிழந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இதனைத் தடை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, மக்களிடம் ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இதில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால், உலகிலேயே பரிசோதனைக்காக விலங்குகள் பயன்படுத்துவதை தடை செய்த முதல் நாடு என்ற பெருமை ஸ்விட்சர்லாந்துக்கு கிடைக்கும். ஆனால், மருந்து நிறுவனங்களால் அரசுக்கு கிடைக்கும் பல கோடி வருவாய் நின்று விடும் என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.