இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை இலங்கை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கிறது.
அன்னியச்செலாவணி கரைந்து, இறக்குமதி பாதித்து, அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், இலங்கை மக்களுக்கு உதவும் விதமாக இந்தியாவிலிருந்து நிதியுதவி மற்றும் ஏராளமான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதில், தமிழகம் சார்பாக 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் கொழும்பை சென்றடைந்தன. இந்த நிலையில், அவற்றை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.