இஸ்ரேல் ராணுவம் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், பாலஸ்தீன போராளி அமைப்புக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. அதன்படி கடந்த மே மாதம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போராளி அமைப்பான ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் மூண்டது. சுமார் 11 நாட்கள் நீடித்த இந்த போரானது பின் முடிவுக்கு வந்தது. இப்போரில் இஸ்ரேல் தரப்பில் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் இல்லை என்றாலும் ஹமாஸ் போராளிகளின் தொடர் ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவத்தால் தாக்குபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் போரை விரும்பவில்லை என்றும், போர் ஏற்பட்டால் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் ஏவுகணைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு மூத்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.