சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் 35 கோடி செலவில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா முழுவதும் இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் 74 இடங்களில் உள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில் 6 தனியார் மருத்துவமனையில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ரோபாடிக் அறுவை சிகிச்சை மையத்தை முதலமைச்சர் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளதாகவும் கூறினார். மழலையர் பள்ளிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பள்ளியில் மழலையர் முககவசம் அணிய வேண்டிய தேவை இல்லை எனவும் கூறினார்.