மருத்துவக் கல்லூரியில் ராகிங் தொல்லை – மாணவர் தற்கொலைக்கு முயற்சி

 

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங் தொல்லையால் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சேர்ந்த சரவணன் என்பவரை, மூன்றாம் ஆண்டு பயிலும் உள்ளூர் மாணவர்கள் விடுதியில் வைத்து முட்டி போடச் செய்ததாகவும், சிகரெட் வாங்கி வருமாறு மிரட்டியதாகவும் புகார் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மாணவர் சரவணன், நேற்று அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையை சாப்பிட்டும், இடது கையை அறுத்துக் கொண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சக மாணவர்களால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சரவணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ராகிங் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் பிரச்னையை மூடி மறைக்க முயல்வதாக சரவணனின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 

 

Translate »
error: Content is protected !!