குஜராத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செப்டம்பர் 2 முதல் 50 சதவீத மாணவர்களுடன் மீண்டும் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முதல் அமைச்சர் விஜய் ரூபானி இதை அறிவித்தார் என்று கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சுதசாமா கூறினார்.