காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் சூரங்கோட்டில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு ராணுவ வீரர்களை விரைந்தன. அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடி கொடுத்து பயங்கரவாதிகளுக்கு எதிராக எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை தொடர்கிறது.