பாகிஸ்தானில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.600 கோடி மதிப்புள்ள 120 கிலோ ஹெராயினை குஜராத் போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.
மோர்பி மாவட்டத்தில் உள்ள நவ்லாகி துறைமுகம் அருகே குஜராத் காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் 120 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
பாகிஸ்தானில் இருந்து படகு மூலம் போதைப்பொருள் கடத்தியது தொடர்பாக மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில டிஜிபி ஆஷிஷ் பாட்டியா தெரிவித்துள்ளார்.