கம்பத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள அரசு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் கம்பம் மணிகட்டி ஆலமரம் சாலை பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சப்&இன்ஸ்பெக்டர் முத்துமாரியப்பன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 52 மூட்டைகளில் புகையிலை மற்றும் குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் புகையிலை மற்றும் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜாபர் அலியை கைது செய்தனர்.