தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பாவருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.