துப்பாக்கி சூடு சம்பவம்: 1037 பேரிடம் விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை ஆயிரத்து 37 பேரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது.  தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில், 34-வது கட்ட விசாரணை நடைபெற்றது. இதில் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய வெங்கடேஷ், உதவி ஆட்சியராக இருந்த பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த வீரப்பன் உள்பட பலர் ஒருநபர் ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து, 35-வது கட்ட விசாரணை ஜனவரி 24-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும் என்றும், அதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், தென் மண்டல ஐ.ஜி., டி. ஐ. ஜி. ஆகியோரிடம் விசாரணை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!