அகமதாபாத்தில் தடுப்பூசி போடப்படாதவர்கள் இன்று (செப் 20) முதல் சில பொது வசதிகளைப் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் எப்போதும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும்.
தடுப்பூசி போடப்படாதவர்கள் பேருந்துகள், நூலகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
முதல் டோஸை எடுத்துக்கொண்டு இரண்டாவது டோஸிற்காக காத்திருந்தாலும் அவர்கள் போக்குவரத்து சேவை மற்றும் கட்டிடங்களுக்குள் நுழைய அனுமதியில்லை என அரசின் பராமரிப்பில் உள்ள பூங்காக்களின் இயக்குநர் ஜிக்னேஷ் படேல் தெரிவித்துள்ளார்.