விண்ணைத்தொடும் பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை இன்று மீண்டும் உயர்ந்து 105 ரூபாயை கடந்துள்ள நிலையில், டீசல் விலையும் 101 ரூபாயை கடந்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு எதிரொலியாக மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 105 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனையாகிறது.

இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து 101 ரூபாய் 25 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியைடந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!