இந்திய ராணுவத்தின் 4 பிராந்தியங்களிலிருந்தும் இந்த பைக் பேரணி துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர், வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்டு ராணுவப் பயிற்சி முகாமில் இருந்து ராணுவ வீரர்கள் டில்லியை நோக்கிய பைக் பேரணியைக் கடந்த 17ம் தேதி துவங்கினர். மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டரின் குழு, மற்ற 9 அணிகளுடன் சேர்ந்து, 9 நாள்களில் 3,100 கிமீ தூரம் பயணிக்க உள்ளனர்.