பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா உத்தரப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.
அந்த விழாவில் பேசிய அமித் ஷா, பல ஆண்டுகளாக சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆட்டம் நடந்தது. அவர்கள் உ.பி.யை அழித்தார்கள்.. உ.பி.யின் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைப் பார்த்து என் ரத்தம் கொதித்தது… மேற்கு உத்தரபிரதேசத்தில் இருந்து மக்கள் புலம்பெயர்ந்தனர். ஆனால் இப்போது யாரும் புலம்பெயரத் துணிய மாட்டார்கள். இன்று பாகுபலிகள் இங்கு கிடையாது. இந்த மாற்றத்துக்கு பாஜக அரசுதான் காரணம்” என்றார்.