ரஜினிகாந்த் நலம் பெற ரசிகர்கள் சிறப்பு வழிபாடு

சிவகாசியில் நடிகர் ரஜினிகாந்த் நலம் பெறவும் அண்ணாத்த திரைப்படம் வெற்றி பெறவும் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகை தினத்தன்று தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.  இதனை முன்னிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் எனவும், அண்ணாத்த திரைப்படம் வெற்றி விழா காண வேண்டும் எனவும் சிவகாசியில் உள்ள ரஜினி ரசிகர்கள் சிவகாசி சிவன் கோவில் சிறப்பு பூஜை நடத்தினர்.

 

Translate »
error: Content is protected !!