ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்துடன் செய்து கொண்டபடி, இந்தியாவில் பனேசியா நிறுவனம் ஆண்டுக்கு 10 கோடி டோஸ் ஸ்புட்னிக்–வி மருந்து தயாராகிறது.
இந்நிலையில் இன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள பனேசியா பயோடெக் நிறுவனத்தில் அதன் உற்பத்தி தொடங்கியது.ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் மற்றும் பனேசியா பயோடெக் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:இமாச்சல பிரதேசத்தில் உள்ள பனேசியா பயோடெக் நிறுவனத்தில் உற்பத்தி தொடங்கியது.
முதல் தொகுப்பு தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், மருந்தின் தரத்தை ஆய்வு செய்ய மாஸ்கோவில் உள்ள கமலேயா மையத்திற்கு அனுப்பப்படும். கோடை காலத்தில் முழு அளவிலான தடுப்பூசி மருந்து உற்பத்தி தொடங்கப்படஉள்ளது. இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே உள்ள கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துடன் தற்போது ஸ்புட்னிக்–வி மருந்தும் இணைகிறது.