டாஸ்மாக் டெண்டர் முறைகேட்டை கண்டித்து போராட்டம்

டாஸ்மாக் பார் டெண்டர் முறைகேட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 18 ஆண்டுகளாக டாஸ்மார்க் நிர்வாகத்தால் நடத்தப்படும் மது கூடங்களை தாங்கள் நடத்தி வருவதாகவும், கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி இதற்கான டெண்டர் விடப்பட்டது. அதில் கடை நடத்தி வருவதற்கு எந்த உத்திரவாதமும் தராமல் டாஸ்மாக் அலுவலகத்திலிருந்து வெளியேற்றிவிட்டு தன்னிச்சையாக டெண்டர் நடத்தியதாகவும், டாஸ்மார்க் நடத்துவதற்காக பல லட்சம் வரை முதலீடு செய்து, கட்டிடத்தின் உரிமையாளர்களாகவும் தாங்களே இருந்து வரும் நிலையில் தங்களை தவிர்த்துவிட்டு நடத்தியுள்ளதாக குற்றசாட்டப்பட்டுள்ளது.

இந்த டெண்டர் முழுவதும் அமைச்சர் தலையீட்டால் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டும் அவர்கள் இந்த முறைகேட்டை கண்டித்து இன்று காலை சென்னை எம்ஆர்சி நகர் ஐயப்பன் கோவில் அருகே இருந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லம் வரை பேரணியாக சென்று அவருடைய இல்லத்தின் முன்பு பதாகைகள் மற்றும் கோஷங்கள் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஐந்து பேர் மட்டும் அமைச்சருடன் பேச்சு வார்த்தைக்கு சென்ற நிலையில் பேச்சுவார்த்தையும் தோல்வியிலமுடிந்தது.

Translate »
error: Content is protected !!