பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டம்

பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வர் கவனயீர்ப்பு போராட்டத்தை காத்திருப்பு போராட்டமாக முன்னெடுத்து வருகின்றனர்.

அரசு பள்ளிகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள், 10 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர். ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பாடங்களை, இந்த ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு, 2012ஆம் ஆண்டு, 5,000 ரூபாய் மாத சம்பளம் வழங்கப்பட்டது.

பின், படிப்படியாக சம்பளம் உயர்த்தப்பட்டு, 2016 முதல், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

 

Translate »
error: Content is protected !!