வண்டலூர் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு: கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாத ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதனால் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

இதைப் பயன்படுத்தும் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை வண்டலூர் பேருந்து நிலையத்தில் இன்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 5 ஆம்னி பேருந்துகள் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் பயணிகளை ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த 5 ஆம்னி பஸ்களுக்கும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

Translate »
error: Content is protected !!