Supply of 7536 liters of kerosene only
தமிழ்நாட்டில் மண்ணெண்ணெயின் மாதாந்திர தேவை 36 ஆயிரத்து 953 லிட்டராக உள்ள நிலையில், மத்திய அரசு 7 ஆயிரத்து 536 லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்குவதாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தமிழகத்திற்கான தேவையின் 20 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்யும் என்றும் தமிழகத்திற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு வெகுவாக குறைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வருவதாகவும், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.