நாட்டில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் குறைந்து வரும் நிலையில், ஒமிக்ரான் வகையை சேர்ந்த புதிய கொரோனா பாதிப்புகள், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் நாளை ஆய்வு செய்ய உள்ளோம். தமிழகம் வரும் வெளியூர் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் அனைவரும் 7 நாட்கள் கண்காணிக்கப்படுகின்றனர். கண்காணிப்பு இல்லாமல் பயணிகள் யாரும் வெளியே வர முடியாது என தெரிவித்தார்.