கைதிகளுக்கு மல்யுத்த பயிற்சியளிக்கும் சுஷில் குமார்

கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஒலிம்பிக் வீரர் சுஷில் குமார், கைதிகளுக்கு மல்யுத்த பயிற்சியளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சுஷில் குமார். கடந்த ஆண்டு மே மாதம் சொத்து தகராறு காரணமாக, அவரது நண்பர் சாகர் தங்கரை கடுமையாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மல்யுத்த வீரர் சுஷில் குமார் தற்போது டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் சிறையில் உள்ள கைதிகளுக்கு உடற்தகுதி பயிற்சி மற்றும் மல்யுத்த பயிற்சி அளித்திட சிறை அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர்.இதன்மூலம், மல்யுத்த விளையாட்டில் ஆர்வத்துடன் இருக்கும் 6-7 கைதிகளுக்கு ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றுள்ள சுஷில் குமார் பயிற்சி அளித்து வருகிறார்.

Translate »
error: Content is protected !!