கொடைக்கானல் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டது.  கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் சுமார் எழுபத்திஐந்துஆயிரம்  மதிப்புள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டது. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கொடைக்கானல் தலைவர் டாக்டர் குரியன் ஆபிரகாம்…

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கொரோனா விழிப்புணர்வு மலர் கண்காட்சி

மலைகளின் இளவரசி கொடைக்கானல் தற்போது கோடை சீசன் காலம் ஆகும் நோய் தொற்று காரணமாக இந்த சீசன் காலத்தில் நடைபெற வேண்டிய மலர் கண்காட்சி கோடை விழா உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன., சுற்றுலாப்பயணிகளை கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்படவில்லை, இதனால் கொடைக்கானல்…

கொடைக்கானலில் மலிவான விலையில் காய்கறிகள் பழங்கள் விற்பனை..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தோட்டக்கலை சார்பாக வாகனங்கள்  மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் மிக குறைந்த விலையில் இன்று விற்பனை தொடங்கப்பட்டது. இதன்மூலம் வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் தக்காளி 20 ரூபாய்க்கும் கத்தரிக்காய் 30 ரூபாய்க்கும் தேங்கா ஒரு…

கொடைக்கானலில் வாகனம் மூலம் காய்கறி விற்பனை துவக்கம்

கொரோனா பரவல் காரணமாக கொடைக்கானலில் வாகனங்களில் வீடுகளுக்கே காய்கறி கொண்டு சென்று விற்பனை தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வாகனம் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு சென்று வீடு வீடாக விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காய்கறி வாகனங்களுக்கு…

கொடைக்கானலில் நோயாளிகளுக்கு போர்வைகள் மற்றும் மெத்தை விரிப்புகள் பழனி தொகுதி எம்எல்ஏ உத்தரவின் பேரில் திமுகவினரால் வழங்கபட்டது

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு போர்வைகள் மற்றும் மெத்தை விரிப்புகள் பழனி தொகுதி  எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் உத்தரவின் பேரில் திமுகவினரால் வழங்கபட்டது. இந்தியா முழுவதும் கொரானா நோய்தொற்று இரண்டாவது அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்…

கொடைக்கானலில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள்.. நோய் தொற்று பரவும் அபாயம்..!

கொரோனா பரவல் எதிரொலியாக தளர்வுகள் அற்ற ஊரடங்கு நாளை முதல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கொடைக்கானலில் சமூக இடைவெளி பின்பற்றாமல் காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள். நோய் தொற்றுபரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது ..இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது ..தொடர்ந்து நாளை முதல் ஒரு வார காலத்த்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது ..இன்று ஒரு நாள் மட்டும் கடைகள் அனைத்தும் திறந்து இருக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் கொடைக்கானலில் காய்கறிகள் மற்றும்  பொருட்கள் வாங்க பொதுமக்கள் பல்வேறு இடங்களில் குவிந்தனர். அரசு முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முகக்கவசம் முறையாக அணியாமலும் இருந்ததால் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது ..மேலும் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் பொதுமக்கள் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர்.  

கொடைக்கானலில் தொடர் பலத்த மழை… மக்கள் கடும் அவதி..!

திண்டுக்கல்  மாவட்டம் கொடைக்கானல் ஆனந்தகிரி 7வது தெரு பகுதியில் தொடர் மழை காரணமாக பாலம் இடிந்தது. இதனால் இந்த பாலம் அருகில் இருந்த இரண்டு கார்கள் முற்றிலும் சேதமானது. தொடர் மழை காரணமாக பாலம் இடிந்ததில் மழைநீர் இந்த பாலம்அருகில் இருந்த ஐந்து வீடுகளுக்குள் புகுந்தது. வீட்டில் இருந்த மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.   சுமார் இரண்டு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக இந்த பாலம் இடிந்து உள்ளது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இந்த பாலத்தில் மதகுகள் மற்றும் சேதமான தாங்கு சுவர்களை உடனடியாக சீரமைத்தனர். இதனால் தேங்கியிருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டது.  வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் மற்றும் சாக்கடை நீர் காரணமாக வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். பின்னர் நகராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள் வீட்டிற்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றினர். மேலும் வீட்டின் அருகே  நிறுத்திவைக்கப்பட்டிருந்த  இரண்டு கார்களும் முற்றிலும் சேதமடைந்தன.    

கொடைக்கானலில் பிளாஸ்டிக் கழிவுகள் உண்பதால் கால்நடைகள் பலியாகும் அவலம்.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திண்டுக்கல்  மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி பகுதியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் நகராட்சி சார்பில் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பைத் தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. ஆனால் மிக பழமையான பழுதான குப்பைத்தொட்டிகள் தான் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை…

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு தடை.. வணிகர்கள் போராட்டம்

சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கொடைக்கானலில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளை நம்பி உள்ள சிறுவியாபாரிகள் தமிழக அரசின் அறிவிப்பால் பாதிப்பு என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

உலக சுற்றுலா தளமான கொடைகானலில் சாலைகள் வலு இழந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி…

உலக சுற்றுலா தளமாக இருக்கக்கூடிய கொடைக்கானல் தன்னுடைய தகுதியை சாலைகள் மூலம் இழந்து வருகிறது. படு மோசமான சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி… திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மிகப்பெரிய சுற்றுலா தளம் உலக நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருவது வழக்கம் .. இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்திருந்தாலும் தற்போது மெல்ல அதிகரிக்க தொடங்கியிருக்கிறார்கள் கடந்த வருடம் 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வரை கொடைக்கானலுக்கு வருகை தந்திருந்தார்கள். வருடத்திற்கு 50 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கு மேற்பட்டோர் கொடைக்கானலுக்கு வருவது வழக்கம் இப்படி இருக்க கூடிய சூழ்நிலையில் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் கொடைக்கானலில் இருக்கக்கூடியபொது மக்கள் பெரும்பாலும் மலைச்சாலையே பயன்படுத்துகிறார்கள். கொடைக்கானலில் இருக்கக்கூடிய சாலைகள் நெடுஞ்சாலை துறை மற்றும் கொடைக்கானல் நகராட்சி சார்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது பிரதான சாலையான வத்தலகுண்டு – கொடைக்கானல் பழனி – வத்தலகுண்டு சுற்றுலாத்தலங்கள் ஏரிசாலை உள்ளிட்டவை நெடுஞ்சாலைத்துறை சார்பாகவும் நகர்ப்பகுதிகளில் இருக்கக்கூடிய சாலைகள் நகராட்சி சார்பாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது… மழை காலங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ,பாறை உருண்டு விழுதல் உள்ளிட்டவைகள போக்குவரத்து பாதிக்கப்படும். இதற்கு நிரந்தர தீர்வு இதுவரை எட்டப்படவில்லை .மேலும் தற்போது நாம் பார்க்கக் கூடிய இந்த சாலைகள் கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் அல்ல கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் உள்ள சாலைகள் இதில் நெடுஞ்சாலை துறை சார்பாக கோடிக்கணக்கில் சாலைகள் டெண்டர் விடப்படுகிறது . தற்போது கூட 45 கோடி ரூபாய்க்கு மேல் பராமரிப்பு பணிக்காக கொடைக்கானல் நெடுஞ்சாலைத் துறைக்கு தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது இந்த 45 கோடி ரூபாயில் பல்வேறு பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பணிகள் நடை பெற்றாலும் கூட அந்த பணிகள் உரிய நேரத்தில் முடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது . முக்கியமாக கொடைக்கானலில் இருந்து பழனிக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் ..இந்த சாலை கடந்த பல மாதங்களாகவே பராமரிப்பு பணியில் இருக்கிறது இதனால் அந்த பகுதியில் செல்லக்கூடிய வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. சாலை பணிகள் நடைபெறும் இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்படுவதில்லை மேலும் அந்த இடங்களில் பல்வேறு கனரக வாகனங்கள் சாலை பணிக்காக இயக்கப்படுவதால் மேலும் சாலைகள் நலிவடைய தொடங்குகின்றது ..இதே போன்று பெரும்பாலான மக்கள் பயன்பாட்டில் இருக்கக்கூடிய பாம்பார் புரம் சாலையும் இதேநிலைதான் ஏற்பட்டிருக்கிறது.  மேலும் இந்த 45 கோடி ரூபாய்க்கு வேலை கொடுக்கப்பட்டாலும் இந்த வேலைகளை முறையாக அதிகாரிகள் கவனிப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது பெயரளவுக்கு முடிக்கக்கூடிய இந்த வேலைகள் அடுத்த மழை காலம் வரும் முன் மீண்டும் அதே வேலை வருவதாக கொடைக்கானல் மக்கள் குற்றம் சாட்டிவருகிறார்கள். இது மட்டுமல்லாது பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதால் கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் விபத்திலும் பழுதடைந்து ஆங்காங்கே நிற்கக்கூடிய ஒரு சூழ் நிலையும் ஏற்பட்டிருக்கிறது அதிகாரிகள் முறையாக இந்த சாலை பணிகளை கவனிக்காததால் இதுபோன்ற நிலை கொடைக்கானலில் பல வருடங்களாகவே தொடர்கிறது என்று கோடை மக்கள் குமுறுகிறார்கள். மேலும் கொடைக்கானலில் நடைபெறக்கூடிய டெண்டர்கள் ஆளும் கட்சியினர் பெரும்பாலும் எடுத்துக் கொள்வதால் அந்த வேளையில் அதிகாரிகள் முறையாக கவனிப்பதில்லை ..மேலும் உலக சுற்றுலா தளமாக இருக்கக்கூடிய கொடைக்கானலில் அடிப்படை வசதிகளில் ஒன்றாக இருக்கக்கூடிய சாலை வசதியை முழுவதுமாக மேம்படுத்தி உலக மக்கள் அனைவரும் வந்து சென்று பார்ப்பதற்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் ஏற்படுத்தித் தரவும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளை உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.      

Translate »
error: Content is protected !!