திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யாமல் வந்த தமிழக பக்தர்கள் தடுத்து நிறுத்தம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யாமல் வந்த தமிழக பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கடந்த 26 ஆண்டுகளாக ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த ஆண்டு 150 பக்தர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்து, மீதமுள்ள 350 பேர் மலை அடிவாரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறிய தேவஸ்தான அதிகாரிகள், அவர்களை அருகில் உள்ள வளாகத்தில் அமர வைத்தனர்.

Translate »
error: Content is protected !!