2022-23 ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை பத்தாவது தளத்தில் இருக்கும் கூட்ட அரங்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது .
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் அதை தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவு எடுக்கும் வகையில் பல்வேறு கட்டங்களாக ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது அந்த வகையில் தொழிற்சாலை மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கம் பிரதிநிதிகளுடனும், வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தனித்தனியாக ஆலோசனை நடத்தி கருத்து கேட்க உள்ளார்.