நிதி ஆயோக் இன்று சுகாதார செயல்திறனுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. கேரளா முதலிடத்தில் உள்ளது. தெலுங்கானா 3வது இடத்தில் உள்ளது. கடைசியாக உத்தரப் பிரதேசம் உள்ளது. இந்த தரவரிசைப்பட்டியல் 2019-20 காலகட்டத்தை கணக்கில் கொண்டு வெளியாகியுள்ளது.
சிறிய மாநிலங்களில், ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் அதிகரிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மிசோரம் சிறந்த மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் யூனியன் பிரதேசங்களில், ஒட்டுமொத்த செயல்திறன் அடிப்படையில் டெல்லி மற்றும் ஜம்மு & காஷ்மீர் கடைசி இடத்தில் உள்ளன. அதே நேரத்தில், இந்த யூனியன் பிரதேசங்கள் செயல்திறனை அதிகரிப்பதில் முன்னணி மாநிலங்களாக உருவெடுத்துள்ளன.