சென்னை கோயம்பேட்டில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ச்சியாக கொண்டாடப்பட உள்ளன. இந்த நிலையில் இன்று முதலே கோயம்பேட்டில் பழங்கள், பொருட்கள் இதர பொருட்களின் விலை வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது..
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பண்டிகை காலங்களில் வியாபாரத்திற்கு அனுமதி இல்லாத காரணத்தால் வியாபாரம் மந்த நிலை ஆக காணப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு வியாபாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பண்டிகைக்கு இரு தினங்களுக்கு முன்னதாகவே வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
பூக்களின் விலை, தவிர்த்து பழங்கள் இதர பொருட்களின் விலைகள் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டும் அதே விலைக்கு விற்கப்பட்டாலும் பொது மக்களின் வருகை குறைவாகவே இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்