நகைக் கடன் தள்ளுபடிக்கான தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் – EPS வலியுறுதல்

நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நகைக் கடன் தள்ளுபடிக்கான தொகையினை திமுக அரசு வழங்காமல் சங்கங்களில் உள்ள வைப்பு நிதியினை, நகைக் கடன் தள்ளுபடிக்கும், அன்றாட பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்கியதாகச் செய்திகள் கூறுகின்றன. இதனால் கூட்டுறவு சங்கங்கள் அன்றாடப் பணிகளுக்கு கூட போதிய நிதி இல்லாமல் திண்டாடி வருவதாகவும், இதனை கருத்தில் கொண்டு நகைக் கடன் தள்ளுபடிக்கான தொகையினை உடனடியாக கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Translate »
error: Content is protected !!