காரை மறித்து சேட்டை செய்த குட்டி யானை

தென்னாப்பிரிக்காவில் சாலையோரம் உலாவிக் கொண்டிருந்த குட்டி யானை ஒன்று, அவ்வழியே வந்த காரை மறித்து சேட்டை செய்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள க்ரூகர் தேசியப் பூங்காவை ஒட்டியுள்ள சாலை ஓரத்தில் சில யானைகள் உலவிக் கொண்டிருந்தன. அப்போது, அதிலிருந்த குட்டி யானை ஒன்று, அவ்வழியே வந்த காரை கண்டதும் துறுதுறுவென ஓடி வந்து சாலையில் நடுவில் நின்றதோடு, அந்த காரை பின்நோக்கி செல்லுமாறு துரத்தியது.  சாலையில் குறும்புத்தனம் செய்த குட்டியானையின் செயல்  இணையத்தில் வைரலாகி ஏனையோரை கவர்ந்து வருகிறது.

Translate »
error: Content is protected !!