பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

உலகளவில் கொரோனா தொற்று பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை சமாளிக்க உலக நாடுகள் பெரும் அளவில் போராடி வருகின்றனர். அந்த வகையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைவதன் காரணமாக அமெரிக்காவில் கூடுதல் பாதுகாப்பிற்காக 3-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த அனுமதி கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து பலருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்தி கொண்டார். அதிபர் ஜோ பைடன் கடந்த ஆண்டு டிசம்பர் 21 ம் தேதி முதல் தடுப்பூசியின் முதல் டோஸையும், ஜனவரி 11 அன்று இரண்டாவது டோஸையும் செலுத்தி கொண்டார். என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!