பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

 

 

2022 – 23ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றத்தில் காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.  நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசு முழு கவனம் செலுத்தி வருவதாகவும், பொருளாதார பாதிப்பில் இருந்து இந்தியா வேகமாக மீண்டும் வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான அடிப்படை தேவைகளை மத்திய அரசு பூர்த்தி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!