தாக்குதலுக்கான இறுதி முடிவை அதிபர் எடுக்கவில்லை

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கான இறுதி முடிவை ரஷ்ய அதிபர் புதின் இதுவரை எடுக்கவில்லை என்றாலும், அதற்கான திறன் அவருக்கு உண்டு என்று நம்புவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். க்ரீமியா, உக்ரைன் மற்றும் பெலாரஸ் என எல்லைப் பகுதி முழுவதும் ரஷ்ய ராணுவ துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அட்லாண்டிக் மற்றும் மத்திய தரைக் கடல் பகுதிகளில் ரஷ்ய கடற்படை  போக்கப்பல்கள் முகாமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரத்தில், ஒரு உறுப்பு நாடு மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும் அது நேட்டோ நாடுகள் கூட்டமைப்பின் நடத்தப்பட்ட தாக்குதலாகத்தான் கருதப்படும் என்று கூறிய லாய்ட் ஆஸ்டீன்,  அதனால்தான் உக்ரைன் விவகாரத்தில் இது எங்கள் புனிதக் கடமை என்று அமெரிக்க அதிபர் பைடன் குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Translate »
error: Content is protected !!