சிறுவன் அப்துல்கலாமிற்கு குடியிருப்புக்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பள்ளி மாணவன் ஏ.அப்துல்கலாம் சமூகவலைதளத்தில் பேசியிருந்தார். இதனை வியந்து பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், சிறுவனை தலைமை செயலகத்திற்கு வரவழைத்து வாழ்த்து கூறியிருந்தார். அப்போது சிறுவன் சொந்த வீடு இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை கவனத்தில் கொண்ட முதல்வர் ஸ்டாலின், உடனடியாக சிறுவனுக்கு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ், அவர் விரும்பும் இடத்தில் வீடு ஒதுக்க உத்தரவிட்டார். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின், அப்துல்கலாமின் குடியிருப்புக்கான ஆணையை வழங்கினார்.