ஊரடங்கு இல்லாமலேயே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப்படும்

இங்கிலாந்தில், ஊரடங்கு இல்லாமலேயே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர உள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில், வெகு நாட்களுக்கு பின், தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது. இந்தநிலையில் இதுகுறித்து பேசிய அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து கொரோனா இறுதி அலையை சந்தித்து வருவதாக கூறினார். இந்நிலையில், முக்கிய பணிகளை முடக்கி, ஊரடங்கினை பிறப்பிப்பதற்கு பதில், கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க உள்ளதாக குறிப்பிட்டார். இதனால் மக்கள் முககவசம் அணிந்தபடி பொது இடங்களுக்கு செல்லவும், பணிகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படுவதாக அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!